Sunday, January 31, 2010

கம்பத்தில் சமூக எழுச்சி மாநாடுக்கான - பிரச்சார பொதுக்கூட்டம்

Home Leaders Gallery Contact Us



கம்பத்தில் சமூக எழுச்சி மாநாடுக்கான - பிரச்சார பொதுக்கூட்டம்

கடந்த 24-01-10 அன்று கம்பம் தியாகி பீர் முஹம்மது பாவலர் படிப்பகம் அருகில் சுங்கம் திடலில் மாலை 6.50 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் எஸ்.முஹம்மது அலி நியாஸ் தலைமை தாங்கினார். நகர தலைவர் எஸ்.அஸாருத்தீன் வரவேற்புரை ஆற்றினார். வாவர் பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜி K.M. அப்பாஸ், SDPI மாவட்ட தலைவர் N.திவான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ப்ரண்ட் மாநில பொது செயலாளர் எ. அஹமது பக்ருத்தீன், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எ. முஹம்மது யூசுஃப், SDPI மாநில பொருலாளர் எஸ்.எம். ரஃபிக் அஹமது, மருமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அஸா.உமர் பாரூக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சமூக ஆர்வலர் எ. அப்துல் ஹக்கிம் நன்றி உரை ஆற்றினார். பொது மக்கள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் எ.அஹமது பக்ருத்தீன் அவர்கள் பேசியதாவது,

”நம் நாட்டில் முஸ்லீம்களின் உயிர்கள் மற்றும் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். இதுபோன்ற குற்றஙகளை தண்டிக்கவும் பொறுப்பில் உள்ள அரசாங்கம் இரட்டை நிலையை கையாளுகின்றது. முஸ்லிம்கள் போலி எண்கவுண்டர்கள் மூலம் படுகொலை செய்யப்படுவது மட்டுமில்லாமல் புது புது பெயர்களைக் கொண்டு முஸ்லிம்களை தீவிரவாதிகள் என ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலை மாற நமக்கு உரிய பாதுகாப்பு, சம பங்கீடு பெறுவதற்கு நாம் எழுச்சி பெற வேண்டும். அந்த எழுச்சியை நோக்கிதான் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக எழுச்சி மாநாட்டை முன் வைக்கின்றது”.

No comments:

Post a Comment