Wednesday, December 30, 2009

சமூக எழுச்சி மாநாடு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு பிரிவின் சார்பில் வருகிற 20, 21 பிப்ரவரி 2010 அன்று மதுரையில் சமூக எழுச்சி மாநாடு நடக்கவிருக்கும் அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழகமெங்கும் உள்ள அந்த அமைப்பின் செயல்வீரர்கள் களமிறங்கத்துவங்கினர்.

Monday, December 28, 2009

சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடல் மசூதி

சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடல் வளாகத்தில் உள்ள மசூதியை அகற்ற முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

கடந்த 22-12-09 அன்று சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடல் வளாகத்தில் உள்ள மசூதியை அகற்ற முடிவு செய்தனர். இந்த நிலையில் மசூதியை அகற்றும் முடிவைக் கண்டித்து 22-12-09 அன்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஸ்டாலின் ஹாஸ்பிடல் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ப்ரண்ட், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை, இஸ்லாமிய ஐக்கிய கட்சி, த.மு.மு.க உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள், தங்கள் அமைப்புகளின் கொடிகளுடன் இந்த போராட்டதில் கலந்து கொண்டன.

போராட்டத்தை தொடர்ந்து ஸ்டாலின் ஆஸ்பத்திரி முதல்வர் பிரியா போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மசூதியை அகற்றுவதற்க்கு முன்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய மசூதியை கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் மசூதி இடிப்பது நிறுத்தப்பட்டது.

Saturday, December 19, 2009

செல்லூர் கொலை வழக்கு


15-12-09 அன்று செல்லூர் கொலை வழக்கில் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பினர் நடத்திய
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள காயிதேமில்லத் ஆட்டொ சங்கத்தில் உள்ள அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்களை செல்லூர் காவல்நிலைய எஸ்.ஐ. மோகனும், ஏட்டு பாலமுருகனும் தங்களை பார்த்தால் பயந்து அங்கிருந்து ஆட்டொவை எடுத்து ஓடிவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவோம், காவல்நிலையம் கொண்டு சென்று அடித்தே கொன்று விடுவோம் என்றும் கடந்த பல மாதங்களாக மிரட்டி வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 6-12-09 அன்று எஸ்.ஐ. மோகனும், ஏட்டு பாலமுருகனும் சேர்ந்து திட்டமிட்டு அத்துமிறி ஆட்டோ சங்கத்தினரின் பட்டா இடத்திற்குள் நுழைந்து காயிதே மில்லத் ஆட்டொ சங்க போர்டை பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.


இது சம்பந்தமாக ஆட்டோ ஓட்டுநர் தாவுத்கனி ந்ன்பவர் போலிஸ் உயர் அதிகாடிகளுக்கு அன்றிரவே புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற எஸ். ஐ மோகனும் மற்ற காவல்துறை அதிகாடிகளுடன் கைகோர்த்து திட்டமிட்டு 7-12-09 அன்று செல்லூர் காவல்நிலைய எல்கையில் நடந்த செல்வம் என்பவர் மீது குடி போதையில் நடந்த தாக்குதல் குற்றத்தை பொய்யாக காயிதேமில்லத் ஆட்டோ சங்க ஓட்டுநர்கள் மீது திருப்பிவிட்டுள்ளார். குற்ற ஏண் 3108 / 09 செல்லூர் காவல்துறையினர் 307 இ.த.ச.வில் அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.


செல்வத்தை விளாங்குடியை சேர்ந்த அவருக்கு தெரிந்த நபர்தான் தாக்குதல் நடத்தியிக்கின்றார். 7-12-09 அன்று மதிய வேளையில் கோரிப்பாளையம் அன்பகம் ஹோட்டல் அருகே மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுடு அவர்களுக்குள் ஏறபட்ட வாய்தகராறு கைகலப்பாக மாறி இருவரும் கட்டிபுரண்டு சண்டையிட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக செல்வத்திற்கு தெரிந்த அந்த விலாங்குடி நபர் அவரை ஏதோ ஒரு கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளார். அப்பொது உடன் இருந்த பாபு என்ற ஆட்டொ ஓட்டுநர் செல்வத்தை காப்பாற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.


இந்த தாக்குதல் தனக்கு சாதமாக ஆக்கிக்கொண்ட எஸ்.ஐ மோகன் தன் மேல் உள்ள ஆட்டொ ஸ்டாண்ட் போர்டை பிடுங்கிச் சென்று குற்றத்தை மறைப்பதற்காக மேற்படி ஆட்டோ ஸ்டாண்டின் போர்டை காயம்பட்ட ஆர்.எஸ்.ஆர்.செல்வம் பீடிங்கியதாகவும் அதனால் கோபமுற்ற தாவூதுகனி (எஸ்.ஐ. மோகன் மேல் புகார் கொடுத்தவர்) மற்றும் அவரது சகோதரர்கள் செல்வத்தை குத்தியதாகவும் ஒரு கட்டுக்கதையை உருவாக்கி பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு ஆதரவாக செல்லுர் இன்ஸ்பெக்டர் காட்வினும் செயல்பட்டுள்ளார்.

செல்வத்தை உயிரை காப்பாற்றுவதற்காக அவரை மருதுவமனையில் அட்மிட் செய்த பாபுவை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் போது விளாங்குடி நபர் செல்வத்தை தாக்கினார் என்ற உண்மையை கூறிய போதும், எஸ்.ஐ. மோகன் பாபுவை அடித்து சித்திரவதை செய்து செல்வத்தை குத்தியது தாவுத்கனி சகோதரர்கள் என்று கூறவேண்டும் என்று கூறி துன்புறுத்தியுள்ளார்கள்.


இந்த சித்திரவதைகளை அவருடன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஏனைய ஆட்டொ
ஓட்டுனர்கள் நேரடியாக பார்த்து அதனையும் உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 9-12-09 அன்று மருத்துவமனையில் செல்வம் இறந்துவிட்டார். தற்போது இக்கொலை பழியையும் மேற்படி அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது திருப்பியுள்ளனர்.மேலும் ஒரு படி மேல் சென்று செல்வத்தை அட்மிட் செய்த பாபுவையும் கொலை வழக்கில் பொய்யாக சேர்த்துள்ளனர். மேலும் முதல் தகவல் அறிக்கையில் இறந்த ஆர்.எஸ்.ஆர். செல்வம் கோரிப்பாளையம் சூப்பர் டெய்லர் அருகில் உள்ள ஆட்டொ ஸ்டாண்டில் (காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டாண்டில்) ஆட்டோ ஓட்டி வருவதாகவும் எஸ்.ஐ. மோகனும் இன்ஸ்பெக்டர் காட்வினும் கட்டுக்கதை கட்டியுள்ளனர்.
பைனான்சியர் ஆர்.எஸ்.ஆர். செல்வம் மேற்படி ஆட்டோ ஸ்டாண்டில் உறுப்பினரும் இல்லை அந்த ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனரும் இல்லை என்பது ஊறரிந்த உணமையாகும் மேலும் ஆர்.எஸ்.ஆர். செல்வம் கரந்த 2 வருடங்களுக்கு முன்புதான் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார் என்பதும் கடந்த 2 வருடங்களாக அவர் வட்டிக்கு விடுவதும், ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதும் போன்ற பைனான்ஸ் தொழிலே செய்து வருகிறார் என்பதும் ஊர் அறிந்த உண்மையாகும்.
தன்மேல் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு போர்டை அகற்றிய குற்றத்தை மறைப்பதற்க்காகவும், தன்
மீதே புகார் கொடுத்துவிட்டார்கள் என்ற ஆத்திரத்திலும் மேற்படி எஸ்.ஐ. மோகன் முழு
பூசனிக்காயையும் சோற்றில் மறைக்கும் கதையாக மேற்படி உண்மைகளை மறைத்து முதல் தகவல்
அறிக்கை தயார் செய்துள்ளார். இதற்கு இன்ஸ்பெக்டர் காட்வின் முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.
மேலும் இவ்வழக்கு விசாரணை என்ற பெயரில் பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது
அங்கு சென்று மானக்கேடாக பேசி அச்சுறுத்துவதும், அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்களை தூக்கிச் சென்று
அடித்து துன்புறுத்துவதும் என்று பல்வேறு மனித உரிமை மீறல்களை காவல்துறையினர் செய்து
வருகின்றனர்.
போடப்பட்டுள்ள வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களும் சாட்சிகளும்
நிறைய இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கு விசாரணையை CBCID
போலிஸாருக்கு மாற்ற வேண்டும். பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இது விசயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து இயக்கங்கள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 11- 12-09 அன்று மதியம் 2 மணியளவில் நெல்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஜனநாயக ரீதியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆகவே அநீதிக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை காவல்துறை கைது செய்து பின்னர் அன்று இரவு விடுவித்தது.
இதன் தொடர்ச்சியாக கீழ்க்காணும் சமூக நல அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும்
ஒன்றிணைந்த “ செல்லூர் கொலை வழக்கில் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பு” என்ற பெயரில் கடந்த 13-12-09 அன்று கூட்டமைப்பு உருவாக்கியுள்ளோம்.


இக்கூட்டமைப்பின் மூலமாக தமிழக அரசுக்கு விடும் கோரிக்கைகள்


* செல்லூர் கொலை வழக்கு (குற்ற எண் 3108/09) உண்மை குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும்.
* CBCID விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும்.
* பொய் வழக்கு போட்டுள்ள செல்லூர் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டரை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.
* பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
* நடந்து கொண்டிருக்கின்ற சித்திரவதைகளையும், அச்சுற்த்துதல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
* இக்கோரிகைகளை வலியுறித்தி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க உள்ளோம்.
* அடுத்து தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க உள்ளோம்.
* இப்பொய் வழக்கிற்கு நீதிகிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம்.



கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள்


பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
இந்திய தவ்ஹீத் ஜமாத் ஐக்கிய ஜமாஅத்
குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தேசிய லீக்
சோஷியல் டெமாக்ரடிக் பார்டி கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
மனித நேய மக்கள் கட்சி மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு

Sunday, December 13, 2009

மதுரை ஆட்டோ ஓடுனர்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் -- 300 க்கும் மேற்பட்டவர்கள் கைது


மதுரை ஆட்டோ ஓடுனர்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் -- 300 க்கும் மேற்பட்டவர்கள் கைது

மதுரை கோரிப்பாளயம் உள்ள காயிதேமில்லத் ஆட்டொ சங்கத்தில் உள்ள முஸ்லிம் ஆட்டொ ஓட்டுநர்களை செல்லூர் காவல்நிலைய SI மோகனும், ஏட்டு பாலமுருகனும் தங்களை பார்த்தால் பயந்து அங்கிருந்து ஆட்டொவை எடுத்து ஓடிவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவோம். காவல்நிலையம் கொண்டு சென்று அடித்தே கொன்று விடுவோம் என்றும் கடந்த பல மாதங்களாக மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6-12-09 அன்று எஸ்.ஐ. மோகனும், ஏட்டு பாலமுருகனும் சேர்ந்து திட்டமிட்டு அத்துமீறி ஆட்டோ சங்கத்தினரிடம் பட்டா இடத்திற்குள் நுழைந்து காயிதெ மில்லத் ஆட்டோ சங்க போர்டை பிடிங்கி எடுத்து சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக ஆட்டொ ஓட்டுனர் தாவுத்கனி என்பவர் போலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அன்றிரவே புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஐ. மோகனும் மற்றகாவல்துறை அதிகாரிகளுடன் கைகோர்த்து திட்டமிட்டு 7-12-09 அன்று செல்லூர் காவல்நிலைய எல்கையில் நடந்த செல்வம் என்பவர் மீது குடி போதையில் நடந்த தாக்குதல் குற்றத்தை பொய்யாக காயிதேமில்லத் ஆட்டோ சங்க ஓட்டுநர்கள் மீது திருப்பிவிட்டுள்ளார். குற்ற இண் 3108 / 09ல் செல்லுர் காவல்துறையினர் 307 இ.த.ச.வில் அப்பாவி முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். செல்வத்தை விளாங்குடியை சேர்ந்த அவருக்கு தெரிந்த நபர்தான் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்.

7-12-09 அன்று மதிய வேளையில் கோரிப்பாளையம் அன்பகம் ஹோட்டல் அருகே மது அருந்திக்கொண்டிருந்த பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறு கைகலப்பாய் மாறி இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக செல்வத்திற்கு தெரிந்த அந்த விளாங்குடி நபர் அவரை ஏதோஒரு கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளார். அப்பொது உடன் இருந்த பாபு என்ற ஆட்டொ ஓட்டுனர் செல்வத்தை காப்பாற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்ட எஸ்.ஐ. மோகன் ஏனைய காவல்துறையினருடன் சேர்ந்து சதி ஆலோசனை செய்து திட்டமிட்டு தனக்கு எதிராக புகார் கொடுத்த தாவுத்கனி குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். பாபுவை அடித்து சித்திரவதை செய்து அவரையும் இவ்வழக்கில் குற்றவாளியாக சித்தரித்து சிறையில் அடைத்துள்ளனர். செல்வத்தின் உயிரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு பாபுவையும் பொய்வழக்கில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று 9-12-09 அன்று செல்வம் இறந்து விட்டார். தற்பொது மேற்படி கொலைப்பழியையும் மேற்படி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது திருப்பியுள்ளனர். போடப்பட்டுள்ள வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது என்பதற்காக ஆதாரங்களும் சாட்சிகளும் நிறைய இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கு விசாரனையை C.B.C.I.D போலிசாருக்கு மாற்ற வேண்டும்.

பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்து விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாத், த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள், ஐக்கிய ஜமாத், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், சி.எஃப். ஐ., SDPI, நேஷனல் விமண்ஸ் ஃப்ரண்ட், பெண்கள் எழுச்சி இயக்கம் உட்பட 15 சமூக நல இயக்கங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தயா தலைமையில் 11-12-09 அன்று மதியம் 2 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை நெல்பேட்டை பஸ் நிறுத்தமருகே நடைபெற்றது.

Tuesday, December 8, 2009

BABARI-MAJID

http://popularfrontindia.com/pp/sites/default/files/Babari_Majid_For_Site.jpg?1260105810

அயோத்தியில் பாபர் மசூதி


''அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது, கரசேவகர்களின் திட்டமிட்ட செயல்'' என்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர்ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், லிபரான் கமிஷன் அறிக்கையின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர்ப.சிதம்பரம் பேசுகை‌யி‌ல், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் பல்வேறு மாநிலங்களில் இருந்து கரசேவகர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தர்க்க ரீதியான ஆதரவும் ஏற்படுத்தி தரப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் கரசேவகர்கள் பெருமளவில் குவிந்தபோது, உ.பி.யில் ஆட்சி செய்து வந்த கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு இது பற்றி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலிடமும் சங் பரிவார் அமைப்பின் கரசேவகர்களால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும், பாபர் மசூதி பாதுகாக்கப்படும் எனவும் பொய்யான உறுதிமொழிகளைத் தந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவ் அரசு அரசியல் ரீதியாக தவறான முடிவை எடுத்தது. பா.ஜனதா அளித்த வாக்குறுதியை முழுவதுமாக நம்பி நாங்கள் நம்பிக்கையுடன் தூங்கும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். அப்போது அரசு எடுத்த இந்த முடிவு வருத்தத்துக்குரியது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு காரணம், கரசேவகர்களிடையே தன்னிச்சையாக எழுந்த உத்வேகம்தான் என்று பா.ஜனதா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மசூதி இடிக்கப்பட்டது, திட்டமிட்டு நடத்தப்பட்ட, மனித உணர்வுகளை மதிக்காத கொடூரமான செயலாகும்.

எல்.கே.அத்வானியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷியும், அயோத்தியில் கரசேவகர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மிகவும் மென்மையான அணுகுமுறையை கையாண்டனர். இது, குற்றம் இழைக்கப்படுவதற்கு அளித்த மறைமுக ஆதரவாகும்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆ‌ம் தேதி காலை அயோத்தியில் அத்வானியும், ஜோஷியும் வினய் கத்தியார், அசோக் சிங்கால் மற்றும் இதர சங் பரிவார் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றி தகவல் இல்லை. அன்று காலை நீங்கள் என்ன பேசினீர்கள் எதைப் பற்றி விவாதித்தீர்கள், என்ன முடிவெடுத்தீர்கள் என்பது பற்றி நான் கேட்க விரும்புகிறேன். காலையில் நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு அயோத்தியில் மசூதி இருந்த இடத்துக்கு செ‌ல்‌கி‌றீ‌ர்க‌ள். அன்று காலை நீங்கள் என்ன பேசினீர்கள், என்ன முடிவு எடுத்தீர்கள் என்பது பற்றி எங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நீங்கள் தெரிவிக்கவேண்டும்.

மசூதி இடிக்கப்பட்ட நாளன்று அயோத்தியில் பா.ஜனதா தலைவர் வாஜ்பாய் இல்லை. இதற்காக அவருக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால், அதற்கு முதல் நாள் நடந்த கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், கரசேவகர்கள் அனைவரும் அயோத்திக்கு போகவேண்டும் என்று கேட்டுக் கொண்டாரே?

மசூதியை இடிக்கும் நோக்கத்தில்தான் சங் பரிவார் அமைப்பினர் அயோத்திக்கு சென்றுள்ளனர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆ‌ம் தேதி நடந்த கரசேவை பற்றிய அனைத்து தகவல்களும் பா.ஜனதா தலைவர் அத்வானிக்கு தெரியும். அயோத்தியில் நடந்த அனைத்து நிகழ்வுகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. கரசேவகர்களால் மசூதி இடிக்கப்பட்டபோது காவ‌ல்துறை‌யினரு‌ம், மாவட்ட நிர்வாகத்தினரும் அதை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மசூதி இடிப்புக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துளி கூட வெட்கமோ, வருத்தமோ அடையவில்லை. மசூதி இடிக்கப்பட்டதால், 1992ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டில் இனக்கலவரம் நடந்தது. இதில் 2,019 பேர் பலியானார்கள். இது இன்றளவும் நமது நாட்டை பிளவு படுத்துவதாக அமைந்திருக்கிறது. பா.ஜனதாவின் இந்த பிரித்தாளும் இந்திய சிந்தனைகளை 2004ஆம் ஆண்டும், 2009ஆம் ஆண்டும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இது லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியதைவிட மிகப்பெரிய தண்டனையாகும் எ‌ன்று ப.சிதம்பரம் பேசினார்.

Sunday, December 6, 2009

ராமஜென்ம பூமி

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க. கும்பல் வழக்கம் போல அயோத்தி பிரச்சினையைக் கையிலெடுத்து இந்துமதவெறியைப் பரப்ப முயற்சிக்கிறது. இந்நிலையில் ராமனுக்காகவோ அல்லது ராமன் கோவில் கட்டுவதற்காகவோ பா.ஜ.க. துரும்பைக் கூட அசைக்கவில்லை என பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தைத் திரைகிழித்து, ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் பேட்டியளித்துள்ளார். “தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் இவை:

பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?

ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்.

ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்.

அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது.

ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது?

பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போதிருக்கும் தற்காலிகக் கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகுகிறது. மழைத் தண்ணீரில் இருந்து சிலையைப் பாதுகாக்க நான் ஒரு குடையை

குழந்தை ராமனின் கொட்டகை. அருகில் செல்ல இயலாத காரணத்தால் பின்புரத்திலிருந்து எடுத்த படம்

குழந்தை ராமனின் கொட்டகை. அருகில் செல்ல இயலாத காரணத்தால் பின்புரத்திலிருந்து எடுத்த படம்

வைக்க வேண்டியதாயிற்று. பாபர் மசூதி இருந்தவரை ராமன் சிலை பட்டாடைகளுடன் ஜொலித்தது. இன்றோ கந்தலாடை உடுத்திப் பிச்சைக்காரனைப்போல நிற்கிறது. மசூதி தகர்ப்புக்கு முன்பு ராமனைப் பக்தர்கள் மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். ஆனல் இன்று, குறைந்தபட்சம் 16 மீட்டர் தள்ளி நின்றுதான் பக்தர்கள் கும்பிட வேண்டும். வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையின் புண்ணியத்தால் கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிச் சுற்றி நெடுந்தூரம் நடந்துவர வேண்டியுள்ளது. போலீசுத்துறை ஒவ்வொரு பக்தரையும் தீவிரமாகப் பரிசோதிக்கிறது. சாதாரண பூசைப் பொருட்களைக்கூட கொண்டுவர யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பஜனைப் பாடல்களோ, ராமகாதையோ ஒலிப்பதில்லை. ஒலி பெருக்கிகள் கூட மவுனமாகிவிட்டன. முதல்முறை வருபவர்கள் மறுமுறை வரக்கூடாது என முடிவு செய்து விடுகின்றனர். பாபர் மசூதி இருந்தவரை இப்படியெல்லாம் நடந்ததில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். ஆனால் பாபர் மசூதியை இடித்ததன் மூலம் குழந்தை ராமனின் கோவிலை ராமபக்தர்கள் சிதைத்துவிட்டனர்.

இயல்பான மதச்சாபின்மை: இந்துக்களுக்கு தனிச்சிறப்பான கண்ணாடி வளையல் மற்றும் வழிபாட்டுக்கான பொருட்களை விற்கும் அயோத்தியிலுள்ள முஸ்லிம் கடை.

இயல்பான மதச்சாபின்மை: இந்துக்களுக்கு தனிச்சிறப்பான கண்ணாடி வளையல் மற்றும் வழிபாட்டுக்கான பொருட்களை விற்கும் அயோத்தியிலுள்ள முஸ்லிம் கடை.

எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என எண்ணுகிறீர்கள்?

எப்போது இந்துக்களின் உணர்வுகளும் முஸ்லீம்களது உணர்வுகளும் இவ்விசயத்தில் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் அது கட்டப்படும். எப்போது இரு மதத்தவரின் மனதிலும் “உலகிலேயே சிறந்த நாடு நம் இந்தியா - சாரே ஜஹான் சே அச்சா” எனும் கவிஞர் இக்பாலின் வரிகள் பதிகின்றதோ அப்போது.

அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்துக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஒன்றிரண்டு பழைய ஆட்களைத் தவிர வேறு எந்த சாதுக்களோ, மடாதிபதிகளோ விஷ்வ இந்து பரிஷத்தில் சேரவில்லை. அவர்கள் மதத்தின் பெயரால் இந்தியர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் தில்லி அரியணையைக் கைப்பற்றுவதற்காக ராமனின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதனால் நீங்கள் இந்துத்துவா சக்திகளிடையே எதிரிகளை சம்பாதிக்கவில்லையா?

அவர்கள் என்னைத் தலைமை அர்ச்சகர் பதவியிலிருந்து நீக்கப் பலமுறை முயன்றார்கள். எனக்கு ராமனின் மீது பக்தியில்லை என்றும் சொல்லிப் பார்த்தார்கள். பைசாபாத் ஆணையரிடம் என்னை நீக்கச் சொல்லி மனுக் கொடுத்தனர். ஆனால் மசூதி இடிப்பு வழக்கு முடியும் வரை தற்காலிகக் கோவிலில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு, எனது தலைமை அர்ச்சகர் பதவியைக் காப்பாற்றி வருகிறது.

யார் ராமர்கோவிலை நிர்வகிக்கின்றனர்?

பைசாபாத் ஆணையாளர்தான் பொறுப்பாளர். எல்லா காணிக்கைகளும் ஒரு வங்கிக் கணக்கில் போடப்படும். அதிலிருந்து ஒரு பகுதி “குழந்தை ராமனின்” பராமரிப்புக்குச் செலவிடப்படும். அதுவும் நான் ஊடகங்களில் முறையிட்டதற்குப் பிறகு, சில நேரங்களில் மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில்தான் கிடைக்கிறது. மீதமுள்ள பணத்தைத் தொடமுடியாது.

அயோத்தி ராமஜென்ம பூமி அருகே இந்து சன்னியாசிகளுக்கு பாதரட்சைகளை தயாரித்து விற்கும் முஸ்லிம்: அயேத்தியின் உண்மையான குடிமகன்.

அயோத்தி ராமஜென்ம பூமி அருகே இந்து சன்னியாசிகளுக்கு பாதரட்சைகளை தயாரித்து விற்கும் முஸ்லிம்: அயேத்தியின் உண்மையான குடிமகன்.

அயோத்தி முஸ்லீம்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? அவர்களில் ஒருவர் பாபர் மசூதியை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாரே?

அவர்கள் அயோத்தியின் உண்மையான குடிமக்கள். நமது சிலைகளுக்கு மாலைகட்டிக் கொடுப்பதும், துணிகளைத் தைத்துத் தருவதும் அயோத்தி முஸ்லீம்கள்தான். இந்த முஸ்லீம்கள் கொடியவர்களாக இருந்தால், எங்கள் விழாவுக்கு அவர்கள் கொடுக்கும் பட்டாசுகளில் ஒரு வெடிகுண்டைச் சேர்த்து வைத்து அனுப்பி இருக்க முடியுமே! ஆனால் அவர்கள் இதுவரை அப்படி செய்யவில்லை; இனியும் அப்படிச் செய்யப் போவதில்லை.

இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

இந்தப் பிரச்சனைக்கு அரசியல்வாதிகள் என்றைக்கும் தீர்வுகாணப் போவதில்லை. இந்து ஒருவரையும், முஸ்லீம் ஒருவரையும் தேர்வுசெய்து அவர்களிருவரும் பேசி இதற்கு ஒரு தீர்வுகாணச் சொல்லுங்கள். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூறுங்கள். அந்த மட்டில் சுலபமானதுதான்.

இந்துவெறியர்கள் கடவுள் ராமன் மீது பற்றோ, பக்தியோ கொண்டவர்களல்ல. ராமனை வைத்து ‘இந்து’க்களை அணிதிரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, இந்துவெறி பாசிச பயங்கரத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதனால்தான் ராமன் பொம்மையை அம்போவென விட்டுவிட்டு ராமன் கோயிலைக் கட்டப்போவதாக இன்னமும் வெறியூட்டி வருகிறார்கள். இந்துவெறியர்களின் முகவிலாசத்தையும், மத நம்பிக்கைக்கும் மதவெறிக்கும் உள்ள வேறுபாட்டையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, கடவுள் ராமன் பொம்மை அயோத்தியில் பிச்சைகாரனாக நின்று கொண்டிருக்கிறது