Saturday, December 19, 2009

செல்லூர் கொலை வழக்கு


15-12-09 அன்று செல்லூர் கொலை வழக்கில் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பினர் நடத்திய
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள காயிதேமில்லத் ஆட்டொ சங்கத்தில் உள்ள அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்களை செல்லூர் காவல்நிலைய எஸ்.ஐ. மோகனும், ஏட்டு பாலமுருகனும் தங்களை பார்த்தால் பயந்து அங்கிருந்து ஆட்டொவை எடுத்து ஓடிவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவோம், காவல்நிலையம் கொண்டு சென்று அடித்தே கொன்று விடுவோம் என்றும் கடந்த பல மாதங்களாக மிரட்டி வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 6-12-09 அன்று எஸ்.ஐ. மோகனும், ஏட்டு பாலமுருகனும் சேர்ந்து திட்டமிட்டு அத்துமிறி ஆட்டோ சங்கத்தினரின் பட்டா இடத்திற்குள் நுழைந்து காயிதே மில்லத் ஆட்டொ சங்க போர்டை பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.


இது சம்பந்தமாக ஆட்டோ ஓட்டுநர் தாவுத்கனி ந்ன்பவர் போலிஸ் உயர் அதிகாடிகளுக்கு அன்றிரவே புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற எஸ். ஐ மோகனும் மற்ற காவல்துறை அதிகாடிகளுடன் கைகோர்த்து திட்டமிட்டு 7-12-09 அன்று செல்லூர் காவல்நிலைய எல்கையில் நடந்த செல்வம் என்பவர் மீது குடி போதையில் நடந்த தாக்குதல் குற்றத்தை பொய்யாக காயிதேமில்லத் ஆட்டோ சங்க ஓட்டுநர்கள் மீது திருப்பிவிட்டுள்ளார். குற்ற ஏண் 3108 / 09 செல்லூர் காவல்துறையினர் 307 இ.த.ச.வில் அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.


செல்வத்தை விளாங்குடியை சேர்ந்த அவருக்கு தெரிந்த நபர்தான் தாக்குதல் நடத்தியிக்கின்றார். 7-12-09 அன்று மதிய வேளையில் கோரிப்பாளையம் அன்பகம் ஹோட்டல் அருகே மது அருந்திக்கொண்டிருக்கும் பொழுடு அவர்களுக்குள் ஏறபட்ட வாய்தகராறு கைகலப்பாக மாறி இருவரும் கட்டிபுரண்டு சண்டையிட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக செல்வத்திற்கு தெரிந்த அந்த விலாங்குடி நபர் அவரை ஏதோ ஒரு கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளார். அப்பொது உடன் இருந்த பாபு என்ற ஆட்டொ ஓட்டுநர் செல்வத்தை காப்பாற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.


இந்த தாக்குதல் தனக்கு சாதமாக ஆக்கிக்கொண்ட எஸ்.ஐ மோகன் தன் மேல் உள்ள ஆட்டொ ஸ்டாண்ட் போர்டை பிடுங்கிச் சென்று குற்றத்தை மறைப்பதற்காக மேற்படி ஆட்டோ ஸ்டாண்டின் போர்டை காயம்பட்ட ஆர்.எஸ்.ஆர்.செல்வம் பீடிங்கியதாகவும் அதனால் கோபமுற்ற தாவூதுகனி (எஸ்.ஐ. மோகன் மேல் புகார் கொடுத்தவர்) மற்றும் அவரது சகோதரர்கள் செல்வத்தை குத்தியதாகவும் ஒரு கட்டுக்கதையை உருவாக்கி பொய் வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு ஆதரவாக செல்லுர் இன்ஸ்பெக்டர் காட்வினும் செயல்பட்டுள்ளார்.

செல்வத்தை உயிரை காப்பாற்றுவதற்காக அவரை மருதுவமனையில் அட்மிட் செய்த பாபுவை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் போது விளாங்குடி நபர் செல்வத்தை தாக்கினார் என்ற உண்மையை கூறிய போதும், எஸ்.ஐ. மோகன் பாபுவை அடித்து சித்திரவதை செய்து செல்வத்தை குத்தியது தாவுத்கனி சகோதரர்கள் என்று கூறவேண்டும் என்று கூறி துன்புறுத்தியுள்ளார்கள்.


இந்த சித்திரவதைகளை அவருடன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஏனைய ஆட்டொ
ஓட்டுனர்கள் நேரடியாக பார்த்து அதனையும் உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 9-12-09 அன்று மருத்துவமனையில் செல்வம் இறந்துவிட்டார். தற்போது இக்கொலை பழியையும் மேற்படி அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது திருப்பியுள்ளனர்.மேலும் ஒரு படி மேல் சென்று செல்வத்தை அட்மிட் செய்த பாபுவையும் கொலை வழக்கில் பொய்யாக சேர்த்துள்ளனர். மேலும் முதல் தகவல் அறிக்கையில் இறந்த ஆர்.எஸ்.ஆர். செல்வம் கோரிப்பாளையம் சூப்பர் டெய்லர் அருகில் உள்ள ஆட்டொ ஸ்டாண்டில் (காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டாண்டில்) ஆட்டோ ஓட்டி வருவதாகவும் எஸ்.ஐ. மோகனும் இன்ஸ்பெக்டர் காட்வினும் கட்டுக்கதை கட்டியுள்ளனர்.
பைனான்சியர் ஆர்.எஸ்.ஆர். செல்வம் மேற்படி ஆட்டோ ஸ்டாண்டில் உறுப்பினரும் இல்லை அந்த ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனரும் இல்லை என்பது ஊறரிந்த உணமையாகும் மேலும் ஆர்.எஸ்.ஆர். செல்வம் கரந்த 2 வருடங்களுக்கு முன்புதான் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார் என்பதும் கடந்த 2 வருடங்களாக அவர் வட்டிக்கு விடுவதும், ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதும் போன்ற பைனான்ஸ் தொழிலே செய்து வருகிறார் என்பதும் ஊர் அறிந்த உண்மையாகும்.
தன்மேல் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு போர்டை அகற்றிய குற்றத்தை மறைப்பதற்க்காகவும், தன்
மீதே புகார் கொடுத்துவிட்டார்கள் என்ற ஆத்திரத்திலும் மேற்படி எஸ்.ஐ. மோகன் முழு
பூசனிக்காயையும் சோற்றில் மறைக்கும் கதையாக மேற்படி உண்மைகளை மறைத்து முதல் தகவல்
அறிக்கை தயார் செய்துள்ளார். இதற்கு இன்ஸ்பெக்டர் காட்வின் முழுமையாக ஒத்துழைத்துள்ளார்.
மேலும் இவ்வழக்கு விசாரணை என்ற பெயரில் பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது
அங்கு சென்று மானக்கேடாக பேசி அச்சுறுத்துவதும், அப்பாவி ஆட்டோ ஓட்டுநர்களை தூக்கிச் சென்று
அடித்து துன்புறுத்துவதும் என்று பல்வேறு மனித உரிமை மீறல்களை காவல்துறையினர் செய்து
வருகின்றனர்.
போடப்பட்டுள்ள வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களும் சாட்சிகளும்
நிறைய இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கு விசாரணையை CBCID
போலிஸாருக்கு மாற்ற வேண்டும். பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இது விசயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து இயக்கங்கள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 11- 12-09 அன்று மதியம் 2 மணியளவில் நெல்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஜனநாயக ரீதியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆகவே அநீதிக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை காவல்துறை கைது செய்து பின்னர் அன்று இரவு விடுவித்தது.
இதன் தொடர்ச்சியாக கீழ்க்காணும் சமூக நல அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும்
ஒன்றிணைந்த “ செல்லூர் கொலை வழக்கில் அநீதிக்கு எதிரான கூட்டமைப்பு” என்ற பெயரில் கடந்த 13-12-09 அன்று கூட்டமைப்பு உருவாக்கியுள்ளோம்.


இக்கூட்டமைப்பின் மூலமாக தமிழக அரசுக்கு விடும் கோரிக்கைகள்


* செல்லூர் கொலை வழக்கு (குற்ற எண் 3108/09) உண்மை குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும்.
* CBCID விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும்.
* பொய் வழக்கு போட்டுள்ள செல்லூர் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டரை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.
* பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
* நடந்து கொண்டிருக்கின்ற சித்திரவதைகளையும், அச்சுற்த்துதல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
* இக்கோரிகைகளை வலியுறித்தி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க உள்ளோம்.
* அடுத்து தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க உள்ளோம்.
* இப்பொய் வழக்கிற்கு நீதிகிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம்.



கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள்


பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
இந்திய தவ்ஹீத் ஜமாத் ஐக்கிய ஜமாஅத்
குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தேசிய லீக்
சோஷியல் டெமாக்ரடிக் பார்டி கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
மனித நேய மக்கள் கட்சி மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு

No comments:

Post a Comment