Sunday, December 13, 2009

மதுரை ஆட்டோ ஓடுனர்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் -- 300 க்கும் மேற்பட்டவர்கள் கைது


மதுரை ஆட்டோ ஓடுனர்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் -- 300 க்கும் மேற்பட்டவர்கள் கைது

மதுரை கோரிப்பாளயம் உள்ள காயிதேமில்லத் ஆட்டொ சங்கத்தில் உள்ள முஸ்லிம் ஆட்டொ ஓட்டுநர்களை செல்லூர் காவல்நிலைய SI மோகனும், ஏட்டு பாலமுருகனும் தங்களை பார்த்தால் பயந்து அங்கிருந்து ஆட்டொவை எடுத்து ஓடிவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவோம். காவல்நிலையம் கொண்டு சென்று அடித்தே கொன்று விடுவோம் என்றும் கடந்த பல மாதங்களாக மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6-12-09 அன்று எஸ்.ஐ. மோகனும், ஏட்டு பாலமுருகனும் சேர்ந்து திட்டமிட்டு அத்துமீறி ஆட்டோ சங்கத்தினரிடம் பட்டா இடத்திற்குள் நுழைந்து காயிதெ மில்லத் ஆட்டோ சங்க போர்டை பிடிங்கி எடுத்து சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக ஆட்டொ ஓட்டுனர் தாவுத்கனி என்பவர் போலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அன்றிரவே புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஐ. மோகனும் மற்றகாவல்துறை அதிகாரிகளுடன் கைகோர்த்து திட்டமிட்டு 7-12-09 அன்று செல்லூர் காவல்நிலைய எல்கையில் நடந்த செல்வம் என்பவர் மீது குடி போதையில் நடந்த தாக்குதல் குற்றத்தை பொய்யாக காயிதேமில்லத் ஆட்டோ சங்க ஓட்டுநர்கள் மீது திருப்பிவிட்டுள்ளார். குற்ற இண் 3108 / 09ல் செல்லுர் காவல்துறையினர் 307 இ.த.ச.வில் அப்பாவி முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். செல்வத்தை விளாங்குடியை சேர்ந்த அவருக்கு தெரிந்த நபர்தான் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்.

7-12-09 அன்று மதிய வேளையில் கோரிப்பாளையம் அன்பகம் ஹோட்டல் அருகே மது அருந்திக்கொண்டிருந்த பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறு கைகலப்பாய் மாறி இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக செல்வத்திற்கு தெரிந்த அந்த விளாங்குடி நபர் அவரை ஏதோஒரு கூர்மையான ஆயுதத்தை வைத்து தாக்கியுள்ளார். அப்பொது உடன் இருந்த பாபு என்ற ஆட்டொ ஓட்டுனர் செல்வத்தை காப்பாற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்ட எஸ்.ஐ. மோகன் ஏனைய காவல்துறையினருடன் சேர்ந்து சதி ஆலோசனை செய்து திட்டமிட்டு தனக்கு எதிராக புகார் கொடுத்த தாவுத்கனி குடும்பத்தினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். பாபுவை அடித்து சித்திரவதை செய்து அவரையும் இவ்வழக்கில் குற்றவாளியாக சித்தரித்து சிறையில் அடைத்துள்ளனர். செல்வத்தின் உயிரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு பாபுவையும் பொய்வழக்கில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று 9-12-09 அன்று செல்வம் இறந்து விட்டார். தற்பொது மேற்படி கொலைப்பழியையும் மேற்படி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது திருப்பியுள்ளனர். போடப்பட்டுள்ள வழக்கு பொய்யாக புனையப்பட்டுள்ளது என்பதற்காக ஆதாரங்களும் சாட்சிகளும் நிறைய இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு உடனடியாக இவ்வழக்கு விசாரனையை C.B.C.I.D போலிசாருக்கு மாற்ற வேண்டும்.

பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்து விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாத், த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள், ஐக்கிய ஜமாத், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், சி.எஃப். ஐ., SDPI, நேஷனல் விமண்ஸ் ஃப்ரண்ட், பெண்கள் எழுச்சி இயக்கம் உட்பட 15 சமூக நல இயக்கங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தயா தலைமையில் 11-12-09 அன்று மதியம் 2 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை நெல்பேட்டை பஸ் நிறுத்தமருகே நடைபெற்றது.

No comments:

Post a Comment