Sunday, January 31, 2010

கோவையில் தடையை மீறி சமூக எழுச்சி மாநாடிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

Home Leaders Gallery Contact Us



கோவையில் தடையை மீறி சமூக எழுச்சி மாநாடிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

கோவை உக்கடம் லாரிபேட்டையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாநாட்டுக்கான விளக்க பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.. ஆனாலும், தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவதுற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. பொதுக்கூட்ட மேடையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு பொதுக்கூட்டதில் கலந்து கொள்வதற்காக பாப்புலர் ப்ரண்டின் நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தனர். தகவல் அறிந்த போலிஸ் கமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜி, சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் பாப்புலர் ப்ரண்டின் நிர்வாகிகளிடம் “ இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், எனவே தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தினால் கைது செய்யபடுவீர்கள்” என்றும் போலிசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் பாப்புலர் ப்ரண்டின் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்கு வாதம் எற்பட்டது.

இதற்கிடையில் பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அறிவித்தபடி பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசத்துவங்கினார். இதனால் பிரச்சினை பெரிதானது. இந்த பிரச்சின பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் அங்கு வந்தார். அவர் பாப்புலர் ப்ரண்டின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் போலிஸார் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலிச்சார் வாபஸ் பெறப்பட்டனர்.

No comments:

Post a Comment