Sunday, January 31, 2010

ஓன்றிணைவோம்! சக்திபெறுவோம்!!

Home Leaders Gallery Contact Us



பத்திரிக்கையாளரின் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஏ. பக்ருத்தீன் விடுத்துள்ள அறிக்கை

ஓன்றிணைவோம்! சக்திபெறுவோம்!!

நம் இந்திய தேசம் பல்வேறு சமுகங்களை ஒருங்கே பெற்று தனித்தன்மையுடன் திகழும் கீர்த்திமிக்க தேசம். வேற்றுமையில் ஓற்றுமை என்பதுதான் நம் தேசத்தின் தனிச்சிறப்பு. நம் தேசத்தின் சட்ட நியதியின் அடிப்படையில் தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து சமுகங்களுக்கும் உரிய பங்கிடு வழங்கப்பட வேண்டும். மேலும் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு இவையனைத்தும் அனைத்து சமுக மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கப் பெறவேண்tடும்.

இந்திய தேசம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த வளர்ச்சி தேசத்தின் ஒட்டு மொத்த சமுகத்திற்குமான வளர்ச்சி அல்ல. ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே அந்த வளர்ச்சி சொந்தமாக்கி கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் முக்கிய சமுகங்களான முஸ்லிம்கள், தலீத்துகள், பழங்குடியினர், ஆதிவாசியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் தேசத்தின் வளர்ச்சியிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றனர். வஞ்சிக்கப்படும் சமுகங்களில் முதலிடத்தில் இருப்பது முஸ்லிம் சமுகமே!

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சனைகள் 'பாதுகாப்பு (Security), அடையாளம் (Identity), சமபங்கீடு (Equity)' என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் கடந்த 62 ஆண்டுகளாக நெல்லி, பாகல்பூர், மும்பை, கோவை, குஜராத் என நாடெங்கிலும் சங்பரிவார பாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்படும் வகுப்புக்கலவரங்களால் முஸ்லிம்களின் உயிர்களும், உடைமைகளும் பெரும் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றது. ஒருபுறம் சங்பரிவார பாசிஸ்டுகளால் பாதிப்புக்குள்ளாகும் முஸ்லிம்கள், மறுபுறம் அரசு பயங்கரவாதமான கருப்புச் சட்டங்கள், போலி என்கவுண்டர்கள், பொய் வழக்குகள், தீவிரவாத குற்றச்சாட்டு, நீதி வழங்குவதில் இரட்டை நிலை ஆகியவற்றால் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்கள் தான் நீதி வழங்கும் இறுதி மன்றம். இதனால் முஸ்லிம்கள் நீதிமன்றங்களாலும் வஞ்சிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டதன் மறக்கமுடியாத அடையாளம்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு.

முஸ்லிம்களுடைய அடையாளம் இன்று பெரும் பிரச்சனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. வாடகை வீடு தேடும் சாதாரண முஸ்லிம்கள் முதல் முன்னாள் ஜனாதிபதி, புகழ் பெற்ற நடிகர் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. கல்வி, வேலை வாய்ப்பு, சமநீதி, சமபங்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம், காவல்துறை, உளவுத்துறை, ராணுவம், மற்றும் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முஸ்லிம் சமுகம் உரிய பங்கீடு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

தேசிய அளவில் கல்வி அறிவு பெற்றவர்கள் 64.8% பேர் ஆனால் முஸ்லிம்களில் கல்வி அறிவு பெற்றவர்கள் 59.1% பேர்தான். மேலும் பட்டப்படிப்பில் 3.4% பட்ட மேற்படிப்பில் 1.2% தான் முஸ்லிம்களின் கல்வி நிலை.


தேசிய கணக்கெடுப்பு நிருவனம் நடத்திய 2004-2005 கணக்கெடுப்பின் படி எந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வருமையில் உள்ளனர். இதில் முஸ்லிம்கள் 31% ஆகவும் தலீத் சமுகத்தினர் 35%ஆகவும் உள்ளனர். இதுவே நகர்புறங்களில் முஸ்லிம்கள் 38.4% ஆகவும் தலீத் சமுகத்தினர் 36.4% ஆகவும் உள்ளனர். கிராமப்புறத்தில் 60.4% முஸ்லிம்கள் நில மற்றவர்கள்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4% உள்ள முஸ்லிம்களில் வெரும் 4.9% தான் அரசு வேலை வாய்ப்பு பெற்றவர்கள். 2004ம் வருட தேசிய குற்றப் பதிவேட்டுத் துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாடு காவல்துறையில் 88.524 பேர் உள்ளனர். இதில் வெரும் 99 பேர்தான் முஸ்லிம்கள். இதே தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 5.6% ஆனால் சிறையிலுள்ள முஸ்லிம்கள் 9.6%.

சுதந்திரமடைந்து 62 வருடமாகியும் முஸ்லிம்ககள் தங்களது விகிதாச்சாரத்திற்கேற்ப அரசியல் பிரதிநித்துவத்தை பெறவேயில்லை. கடந்த பாராளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் பிரதிநித்துவத்தை விட நடப்பு பாராளுமன்றத்தால் முஸ்லிம் பிரதிநித்துவம் குறைந்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தத் தயங்ககுவது வாக்காளர் பட்டியளிலிருந்து முஸ்லிம்களின் பெயர்களை திட்டமிட்டே சேர்க்காமல் விடுவது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை ரிசர்வ் தொகுதியாக ஒதுக்குவது என இதுபோன்ற காரணங்கள்தான் முஸ்லிம்களின் அரசியல் பஞ்சநிலைக்குக் காரணம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 27 தொகுதிகள் தனி தொகுதிகளாக மாற்றப்பட்டதை சச்சார் கமிட்டி அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலீத் சமுகத்தினருடைய நிலையும் இதற்கு சற்றும் சளைத்ததாக இல்லை. சமுக கட்டமைப்பில் இன்றும் நிலவிக் கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடு, தீண்டாமைக் கொடுமை, இரட்டைக்குவளை முறை ஆகியவற்றின் அடக்குமுறைக்கு தலீத் சமுகம் உள்ளாக்கப்படுகின்றது. ஒரு ஆய்வறிகையின்படி ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 1 தலீத் தாக்கப்படுகிறார். ஓவ்வொரு நாளும் 3 தலீத் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் 2 தலீத்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஆதிவாசிள், பழங்குடி மக்கள், சிறுபான்மையின கிருஸ்தவ சமுகம், ஒடுக்கப்பட்ட சமுகங்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. தேசத்தின் வளர்ச்சியில் இவர்களுக்கு உரிய பங்கிடு வழங்கப்படவில்லை. கடந்த 2004 முதல் 2008 வரை 5 ஆண்டுகளில் இந்தியாவில் 2858 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. இந்த மதக் கலவரங்கலில் முழுவதுமாக பாதிக்கப்படுவது சிறுபான்மை முஸ்லிம் சமுகமும், கிருஸ்துவ சமுகமும்தான்.

இந்த அவலங்களிலுருந்து இந்திய தேசம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய குடிமக்கள் பாதூகாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய வளங்களில் ஒவ்வொரு சமுதாயமும் தனக்குரிய பங்கை போராடிப் பெறவேண்டும். அத்துடன் தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதுதான் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா முன் வைக்கும் தீர்வு.

'சமுக விழிப்புணர்வே - சமுக எழுச்சி சமுக ஏழுச்சியே - தேசத்தின் பரிபுரண வளர்ச்சி' என்பதை கருத்தில் கொண்டு அனைத்து சமுகங்களின் எழுச்சிக்கு வித்திடும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சமுக எழுச்சி மாநாட்டை நடத்த இறுக்கிறது. இது வரை இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளிலுருந்தும் விடுதலை பெற, தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து சமுகங்களும் உரிய பங்கிட்டை பெற 'ஒன்றிணைவோம் சக்திபெறுவோம்' என்னும் முழக்கத்தை முன்வைத்து சமுக எழுச்சி மாநாட்டிற்கு அணிதிரளுமாறு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்புவிடுகின்றது.

சமுக நீதிப் போராட்டத்தின் பிறப்பிடமான நம் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் எதிர்வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய இரு தினங்களில் tpufD}H upq; NuhL \`Pj; jpg;G Ry;jhd; jplypy; elj;j ,Uf;fpd;wJ. கொடியேற்று நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும் சமுக எழுச்சி மாநாட்டின் முதல் நாள் 'சமுக வலிமையடைதலும் எதிர் கொள்ள வேண்டிய சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் ‘சமுக நீதிக்கான இடஒதுக்கீடு, அரசியல் பிரதிநித்துவம் ஜனநாயகம், சிறுபானமையினரின் உரிமைகளும் பாரபட்சங்களும், தீவிரவாதத்தின் பன்முகம், சமூக வலிமையடைதலும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையும்’ ஆகிய தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன.

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நலப்பணிகள் குறித்த கண்காட்சி, பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் எழுச்சிப் பேரணி, நிறைவு பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் இம்மாநாட்டில் இடம் பெறுகின்றன.

சமுக எழுச்சி மாநாட்டிற்கு அலைகடலென அணிதிரண்டு வருமாறு தமிழக மக்களை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது. என அ. பக்ருதீன கூறினார்.

மாநாட்டு நிகழ்ச்சிகள்

பிப்ரவரி 20-2010

* கொடியேற்று நிகழ்ச்சி

* சமூக வலிமையடைதலும் -எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் என்ற தலைப்பில் பல அறிவுஜீவிகள் கருத்துரை வழங்கும் மாபெரும் கருத்தரங்கள்

* புகைப்படக்கண்காட்சி - ஆகியவை நடைபெறும்.

பிப்ரவரி 21 - 2010

* தலைவார்களும், உலமாக்களும் தலைமையேற்றுச் செல்லும் எழுச்சிப் பேரணி

*பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.

No comments:

Post a Comment